1. Home
  2. தமிழ்நாடு

வெடித்துள்ள சர்ச்சை! வேளாண் சட்டத்திற்கு பாஜக தலைவர்களே எதிர்ப்பு!!

வெடித்துள்ள சர்ச்சை! வேளாண் சட்டத்திற்கு பாஜக தலைவர்களே எதிர்ப்பு!!


மத்திய அரசு கொண்டுவர உள்ள வேளாண் சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்த தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைவிட பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஹரியானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களும் வேளாண் சட்டத்திற்கு எதிராக கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

ஹரியானா பாஜக தலைவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பர்மிந்தர்சிங் துல், ராம்பால் மஜ்ரா ஆகியோர் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறியுள்ளனர்.

பாஜகவில் இருப்பதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப மாட்டோம் என்று அர்த்தமல்ல, இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சீர்திருத்தங்கள் ஏற்கனவே பல நாடுகளில் தோல்வியடைந்துள்ளன என்று கூறியுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை, ஆனால், விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று அவர்களுக்காக குரல் கொடுப்பது முக்கியம், வேளாண் மசோதாக்கள் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பாஜக தலைவர் பர்மிந்தர்சிங் துல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like