மீண்டும் வெடித்த சர்ச்சை..! ஆகம விதிகளை மீறினாரா மதுரை ஆதீனம்..!

ருஞானசம்பந்தர் குருபூஜை அன்று காலம் காலமாக சம்பிராதயப்படி நடைபெறும் ஆதீன மரபுகளும் வழக்கங்களும் ஆகும். இந்த பழக்க வழக்கங்களையும் ஆதீன மரபுகளையும் இது வரைக்கும் மதுரை ஆதீனமாக இருந்த 292 ஆதீனங்களும் பின்பற்றி வந்தார்கள். ஆனால் நேற்று (12-06-2025) நடைபெற்ற சுவாமி திருஞானசம்பந்தர் குருபூஜையில் தற்போது 293வது ஆதீனமாக இருப்பவர் இதை எதையும் பின்பற்றவில்லை. அதாவது இன்று அதிகாலை நான்கு மணி அளவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் சார்பில் அர்ச்சகர்கள் ஆதீனமடத்திற்க்கு வந்து ஆதீனத்தை முறையாக அழைத்து செல்ல வந்த போது ஆதீனம் அவர்கள் காலதாமதத்துடன் திருக்கோவிலுக்குள் வரும்போது அதிகாலை ஐந்து மணிக்கு நேரத்திற்க்கு வழக்கம் போல் நடைபெறும் சுவாமிக்கு திருவனந்தல் முதற்பூஜை ஆதீனத்தின் காலதாமத்தால் 5-1/2 மணிக்கு பூஜைகள் நடைபெற்றது.
ஆதீனத்தால் சுவாமியே காத்து கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.இது ஆகம விதிகளுக்கு முரனானது. இதனை திருவனந்தல் பூஜையை பார்க்க வந்த பக்தர்களும் வேதனை அடைந்துள்ளார்கள்.அதன் பிறகு பூஜை முடிந்தவுடன் ஆதீனத்திற்க்கு திருக்கோவில் சார்பில் ஆதீனத்திற்க்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. அதோடு சரி மதுரை ஆதீனமடத்திற்க்கு ஆதீனம் ஓய்வெடுக்க சென்று விட்டார்.ஆதீனம் மீண்டும் திருக்கோவிலுக்கு வருவார் என்றுதிருக்கோவில் நிர்வாகம் எதிர்பார்த்தது போல் தெரிகிறது.ஆனால் ஆதீனம் வரவில்லை. அதன் பிறகு காலை 11:00 மணிக்கு மேல் தான் திருக்கோவிலில் இருந்து திருக்கோவில் சார்பில் 63நாயன்மார்கள் சப்பரத்திலும், சுவாமிதிருஞானசம்பந்தரை தங்கப்பல்லக்கிலும் மதுரை ஆதீன மடத்திற்க்கு அழைத்து வந்த போது மதுரை ஆதீனம் சுவாமி திருஞானசம்பந்தருக்கு முறையாக வணங்கி பூஜை மரியாதை செலுத்தவில்லை.
மேலும் திருவனந்தல் பூஜை முடிந்தவுடன் மதுரை ஆதீனம் ஆடி வீதிகளில் மேளதாளத்துடன் தேவாரம் திருவாசகம் பாடி உலா வராமலும்,மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நடந்த பூஜையில் ஆதீனம் கலந்து கொள்ளாமலும்,திருக்கோவிலிருந்து சப்பரத்தில் வரும் நாயன்மார்களையும் , தங்கப்பல்லக்கில் வரும் திருஞானசம்பந்தரை திருமடத்திற்க்கு அழைத்து செல்லாமலும்,திருமடத்திற்க்கு முன்பாக திருஞானசம்பந்தருக்கு பூஜை செய்யும்போது (சாஷ்டாங்கமாக) படுத்து வணங்கி முறையாக மரியாதை செலுத்தாமல் காலம் காலமாக நடைபெறும் சுவாமி திருஞானசம்பந்தர் குருபூஜை ஆதீன மரபுகளை மீறியும்,திருவனந்தல் பூஜை ஆகம விதிகளை மீறியும், திருஞானசம்பந்தரின் குருபூஜையை அவமதிக்கும் விதமாக வேண்டுமென்றே ஆதீனம் என்ற ஆணவத்தோடு பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் தான்தோன்றி தனமாக செயல்பட்ட மதுரை ஆதீனத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே மதுரை ஆதீனமடத்தில் 293வது ஆதீனமாக பதவி ஏற்றதில் இருந்தே மதுரை ஆதீனம் சர்ச்சையான கருத்துக்களையும்,பொய்யான தகவலையும் பரப்பியதும் மட்டுமல்லாமல் ஆதீன மடத்தின் புனிதத்தையும் புகழையும் தொடர்ந்து கெடுக்கும் விதமாகவும் தற்போது மதுரை ஆதீன மரபுகளை சீர்குழைக்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் ஆதீனமாக இருக்கவே தகுதியற்ற இவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டு நல்லதொரு ஆதீனத்தை மதுரை ஆதீனமாக நியமித்து மதுரை ஆதீனமடத்தின் மாண்பையும் மரபையும் பாதுகாக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இந்துமக்கள்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.