1. Home
  2. தமிழ்நாடு

UPSC தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி..! பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயர்!

Q

இன்று நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு சில சர்ச்சையான கேள்விகளும் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், 78 வது கேள்வியில் இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என கேட்கப்பட்டுள்ளது. அதில் அம்பேத்கர், தினகர்ராவ் ஜவால்கர் ஆகியோருடன் பெரியார் ராமசாமி என்ற பெயருடன் நாயக்கர் என ஜாதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

1929ல், செங்கல்பட்டு மாநாட்டில் தன் பெயரில் இருந்த ஜாதியை நீக்கி முன்னுதாரணமாக விளங்கிய பெரியாரை ஜாதி பெயருடன் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பொருள் ஆகி உள்ள கவர்னருக்கான அதிகாரம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதா கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like