1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் அவலம்.. கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் 3 ஆண்டுகளில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு !

தொடரும் அவலம்.. கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் 3 ஆண்டுகளில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு !


வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்.. நவீன தொழில்நுட்பம்.. என பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர் உயிரிழப்பு என்ற செய்தி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன.

கழிவுநீர் சாக்கடையில் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் அதிகமாவதால் அதனை முழுமையாக தடுக்கக்கோரியும், இயந்திரங்கள் பயன்படுத்தவும் கோரிக்கை எழுந்து வருகிறது.
தொடரும் அவலம்.. கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் 3 ஆண்டுகளில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு !

இந்நிலையில் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு 2018-19ல் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நடைபெற்றது.

மாநில அரசுகள் கொடுத்த தரவுகளின் படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆகஸ்ட் 31 2020 வரை கழிவுநீர் சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே தரவுகளின்படி, இந்திய அளவில் 51,835 பணியாளர்கள் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே 24,932 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like