தொடர் மழை – மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!!

சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவ மீனா (45) என்ற பெண், புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று மாலை சென்னையில் மழை சற்று ஓயந்த நிலையில், கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார்
அப்போது, வீட்டின் க்ரில் கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மயக்கமடைந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக, அந்த பகுதியில் மட்டும் மின்சாரம் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறுது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
newstm.in