1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் இடைதேர்தலில் போட்டியிடுவது நேர விரயம், வீண் செலவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

1

சென்னை பட்டினம் பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது., “இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து அதிர்ச்சி தரக்கூடிய வேதனையான செய்தியாக உள்ளது. தொடர் ரயில் விபத்துகளால் ரயிலில் பயணம் செய்ய அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய ரயில்வே துறை விழிப்புணர்வுடன் இருந்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

அரசியல் வரலாற்றில் திமுக பலமுறை தோல்வி அடைந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்தனர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக ஏன் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டியில் அமைச்சர்கள் அனைவரும் முகாமிடுவார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும். இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது  நேர விரயம்... வீண் செலவு... (Waste of Time, Waste of Energy, Waste of Money, Waste of Fuel.) அதிமுகவிற்கு வாக்களிக்கும் தொண்டர்கள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தலில் திமுக 6% வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைவாக பெற்றுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் பாஜக தனித்து நிற்க வேண்டும். அதை தவிர்த்து பத்து பேர் உடனான கூட்டணியை சேர்த்து 10% வாக்கு வங்கியை பெற்று விட்டோம் என்று கூறினால் அது சரியல்ல. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே கிடையாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like