மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி...!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்வரத்தை நடைபெற்று வருகிறது .கட்சிகளின் ஆதரவை பெறும் முனைப்பில் பெரிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆனால் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதனை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று சிறிய கட்சிகள் டிமாண்ட் வைத்து வருகின்றன
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே என திட்டவட்டமாக மறுத்த அவர், 20 தொகுதிகளில் பெண்கள், 20 தொகுதிகளில் ஆண்கள் என 40 தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என விளக்கம் அளித்தார்.
எந்த சூழலிலும் கூட்டணி என்பது கிடையாது. தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது.
இவ்வாறு சீமான் கூறினார்.