1. Home
  2. தமிழ்நாடு

ரசிகருக்கு இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

Q

2023 ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியை காண விரும்புவோருக்கு பல ஆயிரம் ரூபாய்களில் தனியார் நிறுவனம் மூலம் ஏராளமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
ரூ, 1000,ரூ. 5000,ரூ. 10,000 என பல விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கானோர் வாங்கினர். கிட்டத்தட்ட 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஆனால் நிகழ்ச்சியை காணச் சென்ற போது, பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாமல் போனது. கடும் போக்குவரத்து நெருக்கடியால் அரங்கத்தினுள் பார்வையாளர்களால் செல்ல முடியவில்லை. ஏராளமானோர் நின்று கொண்டே பார்த்தனர். பல பெண் ரசிகர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை காண சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் ரூ.10,000 செலுத்தி டிக்கெட் எடுத்து இருந்தார். முறையான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்காததால் இசை நிகழ்ச்சியை காணமுடியாமல் போய்விட்டது என்று கூறி அவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.
அந்த புகாரில், இசை நிகழ்ச்சியை காண முடியாததால் கடும் மன உளைச்சல், அதற்கு ஈடாக ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதை விசாரித்த நுகர்வோர் ஆணையம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், ரூ.50 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

Trending News

Latest News

You May Like