கட்டுமான நிறுவனங்கள் வழக்கம் போல் பணிகளை மேற்கொள்ளலாம்..!
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக இருந்தது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கினர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு மீண்டும் வழக்கம் போல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெயிலின் தாக்கம் குறைந்ததால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். வெப்ப அலை மீண்டும் அதிகரிக்கும் வரை வழக்கம் போல் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.