1. Home
  2. தமிழ்நாடு

ராஜஸ்தானில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி..?

1

ராஜஸ்தானில் உதய்ப்பூர்- ஜெயப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாளத்தில் கற்களை இருந்ததை ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனே வந்தே பாரத் ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Vande Bharat

இதையடுத்து அவர் அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தி விபத்தை தவிர்த்துவிட்டார். வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க யாரோ வேண்டுமென்றே சதி செய்துள்ளது தெரியவந்தது. தண்டவாளத்தில் இரு புறத்திலும் வரிசையாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அது போல் ஏதோ இரும்பு ராடுகளும் சொருகப்பட்டிருந்தன.

இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கற்களுக்கு மிக அருகே வந்தே பாரத் ரயில் நிற்கிறது. அதாவது சக்கரத்துக்கு முன்புறத்தில் உள்ள பம்பர் பகுதி மட்டும் அந்த கற்களுக்கு மேல் நிற்கிறது. ஒருவேளை யாரும் அலர்ட் செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் வந்தே பாரத் ரயில் கவிழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது.


இந்த ரயிலை கவிழ்க்க சதி செய்தது யார் என்பதை அறிய அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கற்களில் மிஸ்ஸானாலும் இரண்டு அடி ராடுகளில் சிக்கி எப்படியாவது ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்துள்ளது தெரியவந்தது.

அந்த தண்டவாளம் இருக்கும் பகுதியில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றனவா என ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. சற்றும் இந்த செயலை யாராவது கவனிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பேரில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like