1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ரயிலைக் கவிழ்க்க சதி..?

1

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்றிரவு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அம்பத்தூர் ரயில் நிலையம் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கலந்த செங்கல் என பெரிய கட்டிட கழிவு வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு ரயில் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அவர் தகவல் கொடுத்த நிலையில், ரயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் ஆவடி ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கலவை கலந்த செங்கலை அகற்றினர். 

அதன் பின்னர் அங்கிருந்து 100 மீட்டர் வரை நடந்து சென்று போலீசார் தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலையும் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் பெரிய சிமென்ட் கலந்த செங்கல் வைத்து ரயிலை கவிழ்க்க யாராவது சதித்திட்டம் தீட்டியிருந்தனரா என்ற கோணத்தில்  ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like