1. Home
  2. தமிழ்நாடு

உத்தரப்பிரதேச பாஜகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!!

உத்தரப்பிரதேச பாஜகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!!


உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவின் அமைச்சரவையில் இருந்து விலகியிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே உத்தர பிரதேச பாஜக ஆட்டம் காண தொடங்கியுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததோடு பாஜகவில் இருந்து விலகினார்.

உத்தரப்பிரதேச பாஜகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!!

அவரைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சரான தாரா சிங் சவுகானும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆயுஷ்துறை அமைச்சரான தரம் சிங் சைனியும் ராஜினாமா செய்த கையோடு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார்.

முன்னதாக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும், 2 அமைச்சர்களும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து விலகியிருக்கும் வேளையில் மூன்றாவதாகவும் அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்திருப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like