1. Home
  2. தமிழ்நாடு

நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

1

டெல்லியில் நாளை (ஜூன் 8ம் தேதி) காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது. 

கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் கட்டாயம் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு கார்கே வலியுறுத்தியுள்ளதால், முக்கிய முடிவுகள் எதும் எடுக்க வாய்ப்புள்ளது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like