ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..!
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார். குடியரசு தின விழா தேநீர் விருந்தில் பங்கேற்கும் படி தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் எனக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என அறிவித்துள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இவற்றை கண்டிக்கும் விதமாக (26.01.2024) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.