காங்கிரஸுக்கு ₹1,700 கோடி ரூபாய் அபராதம்..!

இந்திய தேசிய காங்கிரஸுக்கு இன்று ₹1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
கடந்த 2017 - 18 ம் நிதி ஆண்டிலிருந்து 2021 - 22 நிதியாண்டு வரையிலான நான்காண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. அதனால் வட்டியுடன் அபராதமாக ரூபாய் 1700 கோடியை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.