1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸின் முத்தான தேர்தல் வாக்குறுதிகள்!

1

தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து தயார் செய்து வருகின்றன அரசியல் கட்சிகள்.அந்த வகையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ஐந்து, ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்றைய தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர், இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் எழுச்சி காங்கிரஸில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்த நடைபயணத்தின் போது ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தோம். இத்துடன் நிற்காமல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க இருக்கிறோம். எங்களின் தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் எடுபடும். வெற்றிக்கான பாதையை எங்களுக்கு இட்டுத் தரும் என்று தெரிவித்தனர்.

வாக்குறுதிகள்

  1. ஒருங்கிணைந்த சமூக, பொருளாதார, சாதி அடிப்படையில் தரவுகளை சேகரிப்போம்.
  2. எஸ்.சி/ எஸ்.டி/ ஓபிசி பிரிவினருக்கு சம வாய்ப்புகளை உருவாக்கி தருவோம்.
  3. எஸ்.சி/ எஸ்.டி துணைத் திட்டத்தின் கீழ் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  4. ஓராண்டில் வன உரிமைகள் சட்டம் அமல்படுத்தப்படும்.
  5. பழங்குடியின மக்கள் தங்களின் பூர்வீக இடத்தில் தொடர்ந்து வசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல்.
  7. நிலையான கடன் தள்ளுபடி ஆணையத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
  8. பயிர் இழப்பிற்கு 3 மாதங்களில் காப்பீட்டு தொகை அளிக்கப்படும்.
  9. விவசாயப் பொருட்களுக்கு நிலையான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை அமல்படுத்துதல்.
  10. ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  11. சுகாதார வசதிகள் பெறும் உரிமை நிலைநாட்டப்படும்.
  12. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளார்களுக்கு தினசரி ஊதியம் 400 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  13. வேலை பாதுகாப்பு, விபத்து காப்பீடு ஆகியவை முறைசார தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்படும்.
  14. அனைத்து குடிமக்களுக்கும் நிலையான வேலைவாய்ப்பு வழங்குதல்.
  15. ஏழை பெண்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
  16. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.
  17. ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் சம்பள பங்களிப்பு இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.
  18. ஒவ்வொரு கிராமத்திலும் அதிகார் மந்திரிகள் நியமனம் செய்யப்படுவர்.
  19. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாவித்திரி பூலே வேலை செய்யும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

 

Trending News

Latest News

You May Like