இந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது காங்கிரஸ் இல்லை..!
ஈவேரா மறைவை அடுத்து நடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவரும் திடீரென மறைந்துவிட்டதால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மற்றொரு மகனான சஞ்சய் சம்பத் நிறுத்தக் கூடும் எனக் கூறப்பட்டது. மேலும் திமுகவே களமிறங்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக் கொண்டார். இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனை நடத்தியது.
இதுபற்றி பேசிய செல்வப்பெருந்தகை, இரண்டு தரப்பிலும் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். இதில் எந்தவித வருத்தமும் இல்லை. திமுகவின் வேட்பாளர் என்பது காங்கிரஸின் வேட்பாளர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர். அப்படி பார்த்து தான் வேலை செய்வோம். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவருக்காக நாங்கள் அனைவரும் பணியாற்றுவோம்.
காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் இந்த ஜனநாயகத்தை அறிந்தவர்கள். இந்த தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே ஆபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து அனைவரும் பணியாற்றுவோம் என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 10, 2025
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே… pic.twitter.com/4JnjWznTIs