1. Home
  2. தமிழ்நாடு

விஜய் அரசியல் வருகை : வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி!

1

விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி...

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படத்துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் திரு. விஜய் அவர்க்ள் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் எ து சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை என் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

1

Trending News

Latest News

You May Like