ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கூட வழங்கவில்லை காங்கிரஸ் !
ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் என்பதையும், அரசு எடுத்த முக்கிய முடிவுகளை அவர் எடுத்துரைத்தார்.
முத்தலாக்கிற்கு எதிரான சட்டம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, பொதுப் பிரிவு ஏழைகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது பாஜக ஆட்சியில் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் வான்வழித் தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 10 ஆண்டுகளில் மத்தியில் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகள் அவர்களின் முகாம்களிலேயே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் கூட வழங்கப்படவில்லை. எதிரிகளின் தோட்டாக்களிடம் இருந்து அவர்களை பாதுகாக்க சரியான ஏற்பாடு இல்லை.
ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்கியது பாஜக தான். நவீன துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள், வரை அனைத்தும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும் மோடி தெரிவித்தார்.