1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்..!

Q

அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்ககு ராஜ்யசபாவில் நேற்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்க முதல்வர்களான மு.க.ஸ்டாலின், சித்தராமையா, மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி எம்பிக்கள் இணைந்து முடக்கி வைத்தனர். நாடாளுமன்ற வளாகத்திலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, அமித்ஷாவை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளை அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றப் போகிறது பாஜக என்பதன் தொடக்கம்தான் இது. அம்பேத்கருக்கு எதிரானவர்கள்தான் பாஜகவினர். பாஜகவின் சித்தாந்தமே அம்பேத்கருக்கு எதிரானது. அம்பேத்கர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசனத்தை ஒழித்துக் கட்டுவதுதான் பாஜகவின் வேலை. ஒட்டுமொத்த தேசமும் இதனை நன்றாகவே உணர்ந்துள்ளது என்றார். மேலும் மனுதர்மத்தை (மனுஸ்மிருதியை) ஏற்கக் கூடியவர்களுக்கு அம்பேத்கர் எரிச்சலூட்டக் கூடிய ஒவ்வாமையாகத்தான் இருப்பார் என்றும் ராகுல் காந்தி கூறினார்

.ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நாட்டின் அரசியல் சாசனத்தையும் அண்ணல் அம்பேத்கரையும் அவமதித்துவிட்டார் அமித்ஷா. மனுதர்மத்தை சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள். அரசியல் சாசனத்தையோ அண்ணல் அம்பேத்கரையோ மதிக்க மறுப்பவர்கள்தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர். 

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய பேச்சுக்காக அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அமித்ஷாவின் இத்தகைய பேச்சு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தேசமும் பற்றி எரியும். அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

Trending News

Latest News

You May Like