குவியும் வாழ்த்துக்கள்..! எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது..!

தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, 2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலை எழுதிய விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படும் என சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
அண்ணாமலை வாழ்த்து
சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: 2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனு க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள விஷ்ணுபுரம் சரவணன் , கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.
விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.