1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள் ..! கனடா அமைச்சரவையில் கோவை பூர்வீகமாக கொண்ட பெண்..!

Q

கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம்பெற்றுள்ளார்.

அந்நாட்டின் மிக முக்கியமான அமைச்சர் பொறுப்புகளில் ஒன்றான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்த்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.

இந்த பொறுப்பை ஏற்பதற்கு முன்னர், முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ருடே-வின் அமைச்சரவையிலும் போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா பதவி வகித்தார்.

ஜஸ்டின் தலைமைக்கு பின்னர் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில் இவரின் பெயரும் அடிபட்டது. ஆனால் இவர் சென்ற ஜனவரி மாதத்தில் பாராளமன்றத்திற்கு வணக்கம் தெரிவித்துவிட்டு முழுவதுமாக கல்வி தொடர்பாக தனது கவனத்தை செலுத்தப்போகிறேன் என்று கூறியிருந்தார். 

Trending News

Latest News

You May Like