குவியும் வாழ்த்துக்கள்...! தங்க மகளுக்கு உற்சாக வரவேற்பு..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா (17) பங்கேற்றிருந்தார்.
மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாம்பியன் ஆனார். இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார். அமெரிக்காவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் பங்கேற்றனர்.
எளிய பின்புலம் கொண்ட காசிமாவின் வெற்றியை, தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இவருக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்தது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில், 3 தங்கப் பதக்கங்கள் வென்று நாடு திரும்பிய ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமாவிற்கு, மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள் வரவேற்றுள்ளனர்.
#Watch | தங்க மகளுக்கு உற்சாக வரவேற்பு! 🥇🥇🥇
— Sun News (@sunnewstamil) November 22, 2024
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமாவிற்கு, மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.
தனிப் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என… pic.twitter.com/87SePuox0j