1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! மிக எளிமையாக நடந்த விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்..!

1

நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தனது திருமணம் என்று உறுதியாக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ‘ஆகஸ்ட் 29-ந்தேதி நல்ல தகவலை சொல்லுவேன்' என்று விஷால் பதில் அளித்து இருந்தார்.

அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த விழாவில் தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like