குவியும் வாழ்த்துக்கள்..! திருமண தேதியை அறிவித்த விஜய் டிவி பிரபலங்கள்!

அழகு சீரியல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சங்கீதா. மேலும் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். அதேபோல கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் மலர் டீச்சர் ஆக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதே சீரியலில் கலையரசன் என்ற ரோலில் நடித்தவர்தான் அரவிந்த் சேஜூ. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களுடைய காதலை கடந்த ஆண்டு புகைப்படத்துடன் அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், அரவிந்த் சேஜூ - சங்கீதா ஜோடி எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய உள்ளதாக தமது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இந்த ஜோடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாக உள்ள அய்யனார் துணை என்ற சீரியலில் அரவிந்த் முக்கிய ரோலில் நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மதுமிதா நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.