1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு..!

1

திரையுலகில் மிகப்பெரிய விருது என்றால், அது ஆஸ்கார் விருதுதான். உலக படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், படம், நடிகை, துணை நடிகர் நடிகை, இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். 

 

இந்நிலையில் பல்வேறு சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெறவுள்ளது. கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்கர் விருதானது 35 வருடங்களுக்கு பிறகு டாம் குரூஸுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like