குவியும் வாழ்த்துக்கள்..! இன்று அஜித் - ஷாலினிக்கு திருமண நாள்..!
தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் , நடிகைகளில் இன்றளவும் சிறந்த காதல் ஜோடியாக திகழும் அஜித்-ஷாலினி இருவரும் கடந்த 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
மிகவும் பிரபலமான இவர்களின் காதல் கதை 1999ம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' படத்தில் ஜோராக ஆரம்பித்தது.
சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இன்று அவர்கள் தங்களது 24ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிவருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மோ;மொழிகளில் கிட்டத்தட்ட 55 படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.பின்னர் 7 வருட இடைவேளைக்கு பிறகு ஷாலினி நாயகியாக என்ட்ரி கொடுத்து ஷாலினி மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார்.விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி முன்னணி பாத்திரங்களில் நடித்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.அதிலும் மாதவனுடன் 2000 அலைபாயுதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது க்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
திருமணத்திற்கு பிறகே அலைபாயுதே மற்றும் பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார் ஷாலினி.