1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! இன்று 'டாடா' நடிகை அபர்ணா தாஸுக்கு திருமணம்!

1

இளைய தளபதி நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களது கவனத்தை ஈர்த்தவர்  நடிகை அபர்ணா தாஸ்.அதன் பின்னர் கவினுக்கு ஜோடியாக அவர் நடித்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து திரையுலகில் அபர்ணா தாஸ் இமேஜ் கூடியது.இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார் அபர்ணா தாஸ். இதனால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அபர்ணா தாஸின் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்ட 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படம் தமிழ் சினிமா ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் தீபக் பரம்போல். . இவரும், நடிகை அபர்ணா தாஸும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் இன்று 24.04.2024) நடக்கவுள்ளது. திருமண வைபவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை முன்னிட்டு இருவரும் ஹல்தி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அபர்ணா தாஸ். இதனையடுத்து இந்த ஜோடிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இதனிடையில் தீபக், அபர்ணாவின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like