1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! மீண்டும் ஆண் குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்..!

1

மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு 2013 ல் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப் பெரிய பெயர், புகழை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோக்கள் பட்டியலில் இணைந்தார்.தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை ஊருவாக்கியுள்ளார், நடிகராக பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தார்.கனா படத்தில் தொடங்கி தற்போது வரை பல படங்களை தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

போலீஸ் குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இவர் கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி ஏற்கனவே தமிழக ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.குகன் என்ற மகன் உள்ளார்.மனைவி, மகள் ஆராதனா, மகன் குகன் தாஸுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்வதுண்டு. அந்த புகைப்படங்களை அடிக்கடி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன்.2) மூன்றாவதாகத் தங்களுக்கு மகன் பிறந்ததாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்..

 


 

Trending News

Latest News

You May Like