குவியும் வாழ்த்துக்கள்..! எளிமையாக நடைபெற்ற ரம்யா பாண்டியன் திருமணம்..!
இன்று ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரம்யா பாண்டியன் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.
ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டர் தவோன் என்பவரை தான் காதலிக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பே பரவி வந்தது. அதை சில வாரங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு ரம்யா பாண்டியன் உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இதில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ரம்யா பாண்டியன் நெருங்கிய உறவினர் அருண்பாண்டியன் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வன் போன்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.