குவியும் வாழ்த்துக்கள்..! பசங்க பட நடிகர் ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்தது!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2009-ல் வெளியான ‘பசங்க’ படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீராம். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. மேலும் இந்தப் படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.இந்தப் படம் அவருக்கு ‘பசங்க ஜீவா’ என்ற அடையாளத்தை வழங்கியது. பின்னர், ‘தமிழ் படம்’, ‘வேங்கை’, ‘ஜில்லா’, ‘கோலி சோடா’ (2014), ‘பாபநாசம்’, ‘அடுத்த சாட்டை’, ‘ஸ்ட்ரீட் லைட்’ ஆகிய படங்களில் நடித்தார்.
‘நவரசா’, ‘ஃபை, சிக்ஸ், செவன், எய்ட்’ வெப் சீரிஸ்களில் நடித்தார். இந்நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீராமுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்துள்ளார். பயோடெக் கம்பெனி ஒன்றின் உரிமையாளராக இருக்கிறார் ஸ்ரீராம். அதன் மூலம் ஸ்ரீராம் - நிகில் பிரியா இடையே காதல் மலர்ந்துள்ளது.ஸ்ரீராம் - நிகிலா திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.