1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!

Q

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிக்கான நேர்முக கலந்தாய்வு சென்னையில் நேரில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, அமுதவல்லி என்ற 49 வயதான பெண், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
தனது மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு பயின்றபோது பாடங்களை தனது தாயிடம் பகிர்ந்து உள்ளார். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தால் தாயும் நீட் தேர்வு எழுதி, 147 மதிப்பெண்கள் பெற்றார். அதேபோல், 460 மதிப்பெண் பெற்ற மகளும், மருத்துவக் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
தாய், மகள் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று சாதித்துள்ள நிலையில், படிப்பிற்கு, 'வயது தடை இல்லை' என்பதை மாணவியின் தாய் அமுதவல்லி நிரூபித்துள்ளார். இவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like