1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! பெண் குழந்தைக்கு தந்தையானார் கே.எல்.ராகுல்..!

1

கடந்த 2023-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை திருணம் செய்து கொண்டார் கே.எல்.ராகுல்.


அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  ஆரபத்தில் சுனில் ஷெட்டிக்கு இந்த மகள் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், பின்னர் மகளின் பிடிவாதத்தின் காரணமாகவே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. 

திருமணத்திற்கு பின்னர், மும்பையில் வசித்து வந்த கே.என்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் கடந்த ஆண்டு தங்களுக்கு, குழந்தை பிறக்க உள்ள தகவலை வெளியிட்டனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் கூட அதியா ஷெட்டி தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து, ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை கிரிக்கெட் வீரர் கே.என்.ராகுல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் அவருடைய வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஐபிஎல் 2025 தொடரின் போது தந்தையாகியுள்ளார். இந்த சீசனில் டெல்லி அணிக்காக கே.என்.ராகுல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like