குவியும் வாழ்த்துக்கள்..! இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்..!
நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவர் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சிந்துவுக்கும் வெங்கட தத்தா சாய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதையான, “அன்பு உங்களை அழைக்கும் போது, அதை பின்தொடருங்கள், ஏனென்றால் அன்பு தன்னைத் தவிர வேறு எதையும் கொடுக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும் என்றும் 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் அப்பா தெரிவித்தார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிந்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்