1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! புற்றுநோயை வென்ற முதல் இந்திய வம்சாவளி சிறுவன்..!

1

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே வாட்போர்ட் பகுதியை சேர்ந்தவர் யுவன் தாக்கர் (16). இவருக்கு 6 வயதாக இருந்த போது லியூக்மீயா எனப்பதும் ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் முழுமையாக குணமடையவில்லை.

இறுதியாக, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களை மரபணு மாற்றம் செய்து அவற்றை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் சி.ஏ.ஆர்.டி. கைம்ரியா தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த சிகிச்சையில், சோதனைக் கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி செல்களை நோயாளியின் ரத்த நாளம் வழியாக செலுத்தி புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். 

கடந்த 2019-ல் 11 வயதாக யுவன் இருக்கும் போது இந்த நவீன சிகிச்சை முறை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுக்கு பிறகு யுவன் தாக்கர் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இங்கிலாந்து சி.ஏ.ஆர்.டி. கைம்ரியா தெரபி மூலம் குணமான முதல் குழந்தை யுவன் தாக்கர் ஆவார்.

Trending News

Latest News

You May Like