1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது: டொமினிகா அரசு அறிவிப்பு..!

1

கொரோனா தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.  இது தொடர்பாக டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கொரோனா தொற்றின்போது சரியான நேரத்தில் அவர் டொமினிகாவுக்கு உதவினார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளோம்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறவுள்ள இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன் இந்த விருதை வழங்குவார் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like