குவியும் வாழ்த்துக்கள்..! விநோத முயற்சியில் களமிறங்கிய கோவை இளைஞர்கள்..!

கோவையில் செயல்பட்டு வரும் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பை சுய தொழில் முனைவோர் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் வேலைக்கு செல்வோர் என பல்வேறு நண்பர்கள் குழுவாக இணைந்து உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பை கரும்புக்கடை பகுதியில் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆதரவற்ற முதியோர்கள் , விதவைகள், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்கள் என போதிய வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது, ஆதரவற்ற முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உணவு விநியோகம் செய்வது குளிர்காலங்களில் சாலையோரம் சிரமப்படும் மக்களுக்கு போர்வைகள் வழங்குவது சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்கி வருவது என தொடர்ந்து சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்களை நடத்தி வரும் இந்த அமைப்பினர் இலவசமாக உயர் கல்வி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் , நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளையினர் சமூக பணி சிந்தனையை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக சேமிப்பு உண்டியல் எனும் திட்டத்தை தொடங்கி உள்ளனர் .
நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் உங்களுக்கே திரும்ப அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் கொடுக்கக் கூடியதில் எதையும் இழக்கப்பட மாட்டீர்கள் என்றார் போல் , அதன்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டியல் மூலமாக சேமிக்கும் பணத்தை மாணவர்களே சமூக பணிகளுக்கு வழங்கும் புதிய சிந்தனையை ஏற்படுத்தி உள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது