குவியும் வாழ்த்துக்கள்..! பெண் குழந்தைக்கு தாயான பிரபல பாலிவுட் நடிகை..!
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா கியாரா அத்வானி இடையே காதல் ஏற்பட்டு 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த கியாரா அத்வானி பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். தங்கள் வீட்டிற்கு குட்டி மகாலட்சுமி வந்திருப்பதை சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் இன்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அறிவித்திருக்கிறார்கள்.
எம்.எஸ். தோனி படம் மூலம் பிரபலமானவர் கியாரா. இவரின் நிஜ பெயர் ஆலியா. ஏற்கனவே ஆலியா பட் இருப்பதால் தன் பெயரை கியாரா என மாற்றிக் கொண்டார். இருப்பினும் இன்ஸ்டாகிராமில் தன் பெயரை கியாரா ஆலியா அத்வானி என்றே வைத்திருக்கிறார் அவர்.
ஹ்ருத்திக் ரோஷனுடன் சேர்ந்து கியாரா அத்வானி நடித்திருக்கும் வார் 2 படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்துடன் சேர்ந்து வருகிறது வார் 2 என்பது குறிப்பிடத்தக்கது.கே.ஜி.எஃப். படம் மூலம் நாடு முழுவதும் பிரபலமான யஷ் தற்போது நடித்து வரும் டாக்சிக் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கியாரா அத்வானி.