குவியும் வாழ்த்துக்கள்..! அம்மாவான "ஸ்டைலிஷ் தமிழச்சி" அக்ஷரா கவுடா..!
இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அதிகம் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் அக்ஷரா கவுடா.
அடிக்கடி தனது கிளாமர், பிகினி புகைப்படங்களை போஸ்ட் செய்யும் அக்ஷராவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட பேன்ஸ்.
தமிழில், விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொற போன்ற படங்களில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதில் இடம்பெற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் அதிக பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், "என் கணவர் போலவே தோற்றமளிக்கும் குழந்தையை அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.