குவியும் வாழ்த்துக்கள்..! மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்..!

நடிகர் அஜித் தற்போது தனக்கு பிடித்த கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது..
துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் வி`பத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அஜித் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.
வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்றார். அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Victory in style! 🏆🔥 Team @Akracingoffl shines at the 12H Mugello, Italy, celebrating a fantastic podium finish! 🏁
— அஜித் தலைமை - கோவை (@AjithFc_Cbe) March 23, 2025
Kudos to @fabian_fdx89, @mathdetry, and @BasKoetenRacing for their stellar performance on the track! 🚀🏎️#AKR #AjithKumar | #AjithKumarRacing #24HSeries pic.twitter.com/msRzjGmpwY