1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! நடிகை ரம்யா பாண்டியனுக்கு நவம்பரில் திருமணம்..!

1

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இதன் நீட்சியாக இருவருக்கும் அவரவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1

Trending News

Latest News

You May Like