குவியும் வாழ்த்துக்கள்..! நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயமாகிடுச்சு..!

நாடோடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த அபிநயா தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. மோதிரம் மாற்றிய பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் அபிநயா.
அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தான் ஒருவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக அண்மையில் தான் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அபிநயா. இருப்பினும் அந்த நபர் யார், என்ன செய்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.