1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! தங்க பதக்கம் வென்ற 82 வயது கிட்டம்மாள் பாட்டி..!

Q

பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையைச் சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.
இதன் விளைவாக டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ (Natural strong powerlifting federation) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Trending News

Latest News

You May Like