மீனவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..! வலையில் சிக்கிய 800 கிலோ அரிய வகை கடல் பசு மீண்டும் கடலில் விட்டனர்..!
தஞ்சாவூர் கீழத்தோட்டம் சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இவா்கள் விரித்த வலையில் சுமாா் 800 கிலோ எடையுள்ள அரியவகை கடல் கடல் பசு சிக்கியது.
உடனடியாக இதுகுறித்து அவா்கள் போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் 800 கிலோ எடையுள்ள அரியவகை கடல் பசுவை, வனத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பத்திரமாக மீனவர்கள் கடலில் விட்டனர்.
மீனவர்களின் இச்செயலை பாராட்டி விழா நடத்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கமும் வெகுமதியாக வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு அதிக எண்ணிக்கையில் கடல் பசுக்கள் இருந்தன. தற்போது அவை வெகுவாக குறைந்துவிட்டன. இந்திய வனவிலங்கு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலில் இந்திய கடல் பகுதிகளில் 240 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பசுவின் முக்கியத்துவம் என்ன?
கடல் பசுவை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கின்றனர். கடல் பசு வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். அதிகபட்சம் 4 மீட்டர் நீளம், ஆயிரம் கிலோ எடை வரை இருக்கும். 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.
கடலில் 30 அடி ஆழம் வரை சென்று கடற்புற்களை மேயக்கூடிய கடல் பசுக்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கடலின் மேல் மட்டத்துக்கு வந்து மூச்செடுக்கும். கடல் பசுவின் கர்ப்பக் காலம் ஓராண்டு ஆகும். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியைத்தான் ஈனும்.
கடல் பசுவின் இறைச்சி மருத்துவ குணமுள்ளது என்பதால், அதை அதிக அளவில் வேட்டையாடி வருகின்றனர். மேலும், அதன் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகளும், எலும்பில் இருந்து மருத்துவப் பொருட்களும், கொழுப்பில் இருந்து தைலங்களும் தயாரிக்கப்படுகின்றன.
#Watch | தஞ்சாவூர்: கீழத்தோட்டம் மீனவர்களின் வலையில் சிக்கிய 800 கிலோ எடையுள்ள அரியவகை கடல் பசுவை, வனத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்
— Sun News (@sunnewstamil) November 10, 2024
மீனவர்களின் இச்செயலை பாராட்டி விழா நடத்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கமும் வெகுமதியாக… pic.twitter.com/VM7BpZquNU