1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த தமிழ்நாட்டு மாணவன்!

1

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயை இரு மார்க்கத்திலும்  72 கிலோமீட்டர் நீந்தி, இந்திய நீச்சல் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சாதனை படைத்தனர். இந்த குழுவில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சினேகனும் சாதனை படைத்தார். இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த அவருக்கும்,  பயிற்சியாளர் விஜயகுமாருக்கும் பல்வேறு தரப்பினர், மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயகுமார், இளம் வயதில் குற்றாலீஸ்வரன் கடலில் நீந்தி சாதனை படைத்தது போல் இவரும் சாதனை படைத்து அர்ஜுனா விருது போன்றவை பெறவேண்டும் என முனைப்பில் பயிற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சாதனை மாணவன் சினேகன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற ஆர்வம்  உள்ளதாகவும் கூறினார்.

Trending News

Latest News

You May Like