1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! 'பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் முடிந்தது..!

1

மலையாள சினிமாவில் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இளம் நடிகை கிரேஸ் ஆண்டனி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் இவர் முதலில் தனது திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவு ஒன்றை பகிர்ந்தார். எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் எளிய முறையில் திருமணம் நடந்ததாக கணவரின் புகைப்படம் எதையும் வெளியிடாமல் இருந்தார்.

இதனையடுத்து மற்றொரு பதிவில் தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 9 ஆண்டுக்களுக்கு பிறகு இது நடந்துள்ளதாக குறிப்பிட்டுளார் கிரேஸ் ஆண்டனி. இதனையடுத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இசையமைப்பாளரான ஏபி டாம் சிரியக் , கிரேஸ் ஆண்டனி இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது கொச்சியில் உள்ள தேவாலயத்தில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு கும்பளங்கி நைட்ஸ் மிகப்பெரிய அளவில் பிரபலத்தை தந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பகத் ஃபாசில் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் கிரேஸ் ஆண்டனிக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை தந்தது. தொடர்ந்து ரோஷாக், அப்பன், நுணக்குழி, நாகேந்திரனின் ஹனிமூன் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருந்தார்.

இப்படி மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து வந்த கிரேஸ் ஆண்டனி, பறந்து போ வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிசயம் ஆனார். ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். ராமின் ஸ்டைலில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட படைப்பாக பறந்து போ வெளியாகி இருந்தது.

இப்படத்தில் மிர்ச்சி சிவாவின் மனைவியாகவும், மகன் மீது அக்கறையும் அன்பும் கொண்ட அம்மாவாகவும் நடித்திருந்தார் கிரேஸ் ஆண்டனி. பெற்றோர்களுக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் புரிதல் குறித்து பேசும் படமாக வெளியாகியிருந்த பறந்து போவில் கிரேஸ் ஆண்டனியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது 9 ஆண்டுக்கால காதலரை அவர் திருமணம் செய்துள்ள நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களும் கிரேஸ் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like