1. Home
  2. தமிழ்நாடு

மாநாடு வெற்றி தான் ஆனால் அவரது அரசியல் வெற்றி அடையாது: விஜய் குறித்து இராம.சீனிவாசன்..!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் போது அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சு பலரையும் கவனிக்க வைத்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக என பேதமின்றி அனைத்து கட்சியினரும் நேற்று விஜய்யின் பேச்சை உற்றுக் கவனித்தனர். விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் உற்சாக மிகுதியில் பேசினாலும், சில பாயிண்ட்களை மறக்காமல், அதே நேரத்தில் மிக உறுதியுடன் விஜய் பேசியது தொண்டர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. 4 மணிக்கு மாநாடு தொடங்கி சுமார் 6:15 மணிக்கு எல்லாம் நிறைவு பெற்றுவிட்டது. விஜய் சுமார் 43 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதே நேரத்தில் கொள்கை விளக்கம் உள்ளிட்ட பேச்சுகள் தவிர சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவரது அரசியல் எதிரிகள் குறித்த பேச்சு இருந்தது. பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் நமது எதிரிகள். சாதி மதம், ஏழை பணக்காரர் என பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராக நமது அரசியல் பாதை இருக்கும் என கூறினார். இது பாஜகவுக்கான நேரடி அறிவிப்பு என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுக தான் தனது எதிரி என்பதை விஜய் தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அண்ணா, பெரியாரின் பெயரைச் சொல்லி திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் குடும்பத்திற்கு எதிராக அரசியல் என்பதன் மூலம் திமுகவை விஜய் நேரடியாக சீண்டி இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் விஜய் பேச்சுக்கு திமுகவினரும், பாஜகவினரும் பேட்டி, அறிக்கை, எக்ஸ் பதிவு என அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழிசை செளந்தரராஜன், எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட பாஜகனரும், ரகுபதி, சேகர் பாபு உள்ளிட்ட திமுக அமைச்சர்களும், விஜயை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றிதான். ஆனால் அரசியல் வெற்றி அடையாது என விமர்சித்துள்ளார்

பாஜக பொதுச் செயலாளரான ராம.சீனிவாசன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒருநாள் மழைக்கே தமிழக சாலைகள் பல் இளிப்பது போல, ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்து விட்டது. வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா பாணி வசனங்களை உங்கள் முன்னே டைரக்டரும் கேமராமேனும் இல்லாமலேயே சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள். உங்கள் மாநாடு வெற்றிதான்.. உங்கள் அரசியல் வெற்றி அடையாது” என பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like