1. Home
  2. தமிழ்நாடு

‘மாநாடு’ திரையிட்ட தியேட்டருக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

‘மாநாடு’ திரையிட்ட தியேட்டருக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!


ஈரோடு மேட்டூர் சாலையில் வி.எஸ்.பி. எனும் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில், தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இந்த தியேட்டருக்கு வந்தனர். அப்போது, தியேட்டர் உள் பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அலுவலகத்துக்கு சென்று படம் திரையிடுவதற்கான உரிமத்தை சோதனை செய்தனர்.

‘மாநாடு’ திரையிட்ட தியேட்டருக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
அப்போது, கொரோனா ஊரடங்குக்கு பின் இந்த தியேட்டரின் உரிமம் புதுப்பிக்கபடாமல் இருந்த நிலையில் ‘மாநாடு’ படம் திரையிட்டது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, காட்சிகளை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.பிரேமலதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், உரிமம் இல்லாமல் இயக்கிய குற்றத்திற்காக தியேட்டரை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் தியேட்டரை மூடி சீல் வைத்தனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. பிரேமலதா கூறியபோது “தியேட்டர்கள் முறைப்படி செயல்பட வருடத்துக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கபட வேண்டும். இதற்காக ‘சி’ படிவம் கொடுக்கப்பட்டு உரிமம் புதுப்பிக்கப்படும். இதனிடையில், சில நேரங்களில் ‘சி’ படிவம் பெற உரிய ஆவணங்கள் சமர்பிக்க கால அவகாசம் பெறுவதற்காக ஒரு மாதம் செல்லுபடியாகும் இ-படிவம் மூலம் உரிமம் நீட்டிப்பு செய்வது வழக்கமாக இருக்கிறது.

மேலும் தொடர்ந்து 3 முறை இ-படிவம் வழங்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தியேட்டரில் சி-படிவம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இ-படிவமும் பெற விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு பல திரையரங்குகளில் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்று புகார்கள் வந்ததை அடுத்து அனைத்து தியேட்டர்களிலும் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின்படி ஈரோட்டில் தியேட்டர்களில் சோதனை நடந்து வருகிறது. அந்த சோதனையின்போது இந்த தியேட்டரில் உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே சினிமா திரையிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தியேட்டர் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அதன் அடைப்படையில் தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்படும். ஆகவே அபராத தொகையை செலுத்திவிட்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் புதுப்பிக்கப்பட்ட சான்று பெற்றபின் தியேட்டர் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சோதனை நடைபெறும்" என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like