1. Home
  2. தமிழ்நாடு

30 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு! பிரதமர் மோடி தகவல்!

30 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு! பிரதமர் மோடி தகவல்!


மேற்கு வங்கத்தில் 30 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று, துர்கா பூஜை விழாவின் போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் கலந்து கொண்டார்.

காணொலி காட்சியின் மூலம் பிரதமர் மோடி உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத்தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, துர்கா துர்கா பூஜை திருவிழா இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் ஒரு திருவிழா. இது வங்காளத்தில் இருந்து வரும் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். கொரோனா காலங்களில் துர்கா பூஜையை கொண்டாடும் அனைத்து பக்தர்களும் முன்மாதிரியாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர்.

30 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு! பிரதமர் மோடி தகவல்!

விழாவில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் நம்பிக்கையும்-பக்தியும் ஒன்றுதான். அதற்கான மகிழ்ச்சியும் நம்பிக்கை பூரணமாக இருக்கும்போது துர்கா தேவியின் ஆசிர்வாதம் நம்முடன் இருக்கும். விழாக்காலங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மகளிருக்கு அதிகாரமளிப்பதே எங்கள் அரசின் நோக்கம். பெண்களின் பாதுகாப்பில் அரசு மிகவும் விழிப்புடன் இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 30 லட்சம் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 90 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்றார்

Trending News

Latest News

You May Like