1. Home
  2. தமிழ்நாடு

வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!

1

மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. 

இந்த நிலையில் மாணவர்களிடமிருந்து புகார்களை பெற மத்திய அரசு உயர்நிலைக் குழு ஒன்று அமைத்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருப்பதாவது, 

இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம். நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ என்று இணையதள முகவரியையும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like